ரயில்வே கோட்டத்தை யார் கொண்டு வந்தது?

ரயில்வே கோட்டத்தை யார் கொண்டு வந்தது? மனசாட்சியே இல்லாமல் புளுகும் அன்புமணி புளுகுதாஸ்.
கலைஞரின் நெருங்கிய நண்பராகிய அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத்திடம் கலைஞர் வைத்த கொரிக்கையை உடனே ஏற்று சேலம் கோட்டத்தை ஏற்படுத்தி தந்தார். நவம்பர் 2007 அன்று …

சேலம் கோட்ட தொடக்க விழாவில் லாலுவை அருகில் வைத்து கொண்டு பேசிய கலைஞர்,இந்த சேலம் கோட்டத்தை பெற்று தந்ததற்காக எனக்கு மட்டும் பெருமை சேர்க்க வேண்டாம் இதற்காக குரல் கொடுத்த அனைத்து கட்சியினருக்கும் இதில் பங்கு உண்டு என சாதிதாசையும் சேர்த்தே குறிப்பிட்டார்.உலகிற்கே தெரியும் கலைஞரின்,

மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பொருத்த வரையில் அது 1986 லேயே ஆரம்பிக்கப்பட்டது, 2006ல் 350 உள்படுக்கை வசதியையும் மரு.கல்லூரி மருத்துவமனையில் 650 உள்படுக்கை வசதியையும் உருவாக்க அப்போதைய திமுக அரசு முயற்சித்தபோது, மத்திய அரசின் நிபுணர் குழு 1240 படுக்கைகள் கொண்டதாக மாற்றினால்…

உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றலாம் என்ற ஆலோசனையின் பேரில் மருத்துவமனையை ஒட்டியிருந்த, அருங்காட்சியகம்,தாலுக்கா அலுவலகம், மகளிர் துணை சிறை முதலியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றி சுமார் 6.5 ஏக்கர் நிலங்களை கையகப்படுதியது அப்போதைய திமுக அரசு. மத்திய அரசு …

உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க ₹100 கோடியை கொடுத்து உதவியது. இதில் நீங்கள் மட்டும் பெருமைபட என்ன இருக்கிறது,அன்புமணி புளுகுதாஸ் அவர்களே ???.

7வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், மத்திய அரசு மற்றும் திமுக அரசு அரசின் 60: 40 எனும் நிதி பங்களிப்போடு 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் கட்டுமானப்பணி 2002 ஆண்டு தான் துவக்கப்பட்டது…

கலைஞரின் காலில் விழுந்து சின்னமாங்கா அமைச்சரானது 22 மே 2004, சித்த மருத்துவ ஆராயச்சி நிலையம் அப்போதைய பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் திறக்கப்பட்டது 3 செப்டம்பர் 2005. நீங்கள் ஒரு வருடத்தில் கட்டி முடித்ததா தாம்பரம் சித்த ஆராய்ச்சி நிலையம், அன்புமணி புளுகுதாஸ் அவர்களே????

படித்ததில் பிடித்தது

Leave a comment